பேராசிரியர்
மோகனா அவர்களுக்கு நாளை (11 மே) பிறந்த நாள். அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர்களது
‘உலக கல்லீரல் தினம்” கட்டுரையை
வெளியிட்டிருக்கிறேன்.
பேராசிரியர்
மோகனா அவர்களுக்கு எங்களது இதயங்கனிந்த வாழ்த்துகள்.
இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த உங்களுக்கு
எங்களது மனப்பூர்வ நன்றிகள்.
ஏப்ரல் 19 , உலக கல்லீரல் தினம் ..!
ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கடைப் பிடிக்கப்படுகிறது . மக்களிடையே கல்லீரல் பற்றிய விழிப்புணர்ச்சி உருவாக்கவும், இந்த அற்புத உறுப்பைக் காப்பாற்றவும் இந்த தினம் கொண்டாடப் படுகிறது. இப்போது மக்களுக்கும் மற்றும் உடல்பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கும் கூட கல்லீரல்மற்றும் அதன் நோய்கள் பற்றிய தகவலையும், எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது, என ஐக்கிய நாட்டு சபை கருதுகிறது. அதற்காகவே, இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது. உடலின் அனைத்து வளர்சிதை மாற்றங்களும் நடைபெறும் மேடை கல்லீரல்தான்.
நம் உடலின் மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். இது ஓர் ஆச்சரியமான உறுப்பு என்று கூட கூறலாம். ஏன்
தெரியுமா? எம் பேரு கல்லிரல்பா.! நா.. ஒனக்காக முக்கியமா
500 வேலை செய்யறேன்பா. நா அதே செய்யாட்டி நீ போயிடுவே..! அத்தோட கொசுறா
சும்மா
35 , 000 பணிகள் ஒன் தேவைக்கு ஏத்தாப்பல செய்யறேன்பா..! இப்படிதான் மொத்தமாக
கல்லீரல் சுமாராக 36,000 பணிகளை அனாயசமாக, சும்மா போகிறபோக்கில் செய்கிறதாம். இது இல்லாமல் நாம வாழவே முடியாதுங்க..! ஆனால் இதன் மீள் வளர்ச்சி என்பதும்,
நாம் எதிர்பார்க்காத வகையில் அனாயசமானது. ஆமாப்பா.,
இதன் 80 % சேதமடைந்தாலும் கூட, சாதாரணமாக பணி செய்வார் கல்லீரல் . அதுபோலவே, 80
% வெட்டி வெட்டி எடுத்துவிட்டாலும்
கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக அதன் பழைய அளவுக்கே வளர்ந்து விடுவார். இதன் மீள்திறனும் , தாக்குப்
பிடிக்கும் தன்மையும் மாயாவி போலதான். எடுத்து விட்டாலும் கூட, அடுத்த 15 -20 நாட்களில் இவர் துரித கதியில் படுவேகமாக
அதன் பழைய அளவுக்கே வளர்ந்துவிடுவார். இதன் மீள்திறனும் , தாக்குப் பிடிக்கும்
தன்மையும் மாயாவி போலதான்.
கல்லீரலும் இதயம், மூளை போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.
இது இல்லாவிட்டால் நம்பாடு அம்போ தான். இது கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றில் பெரும்பகுதியை
அடைத்துக் கொண்டு, கொழுக் மொழுக்கென்று இரு பகுதிகளாக இருக்கிறது.
வலது பகுதி, இடதை விடப் பெரியது. கல்லீரலும் மூளையும் எடையில் சமமானவர்கள். அதாவது 1400 கிராம்..! அதற்காக கல்லீரல் இடத்தில் மூளையையும், மூளை உள்ள இடத்தில்
கல்லீரலையும் வைக்க முடியாது நண்பா..!
நம் உடலின் முக்கிய வேதி தொழிற்சாலையும், சுத்திகரிப்பு தொழிசாலையும்
இதுதான். ஆமாப்பா..! நீங்கள் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையற்றதும் ,
தீங்கு விளைவிப்பவையும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலையைச் செய்வது
கல்லீரல்தான். அது மட்டுமல்ல நீங்கள் உண்ணும் உணவை, உடலுக்கு வேண்டிய வடிவத்தில் மாற்றிக்
கொடுப்பவரும் கல்லீரலார் தான். நம் உடனடி தேவைக்குப் போக, உடலுக்கு வேண்டிய ஆற்றல்
கிளைகோஜனாக சேமித்து வைக்கப் படுவதும் இங்கேதான். அவசர தேவையின் சேமிப்புக் களன் கல்லீரலே. உடலில்
தேவைக்கேற்ப, தேவையான இடத்தில் தேவையான அளவு, தேவையான நேரத்தில், குளுகோஸை அவ்வப்போது விநியோகம்
செய்வதும் இவர்தான்.
நீங்கள் ஓர் ஓட்டப் பந்தய வீரர் என்றால் மட்டுமல்ல, பைரவர் (நாய்) துரத்தும்போது
ஓடினாலும் கூட, அந்த ஓட்டத்தின்போது, உடல்
தசை செயல்படத் தேவையான குளுகோஸை அதற்குத் தந்து உதவுவது கல்லீரல் தான். இல்லாவிட்டால்,
நீங்கள் அம்பேல்தான்.
உங்களின் உடலில் பாக்டீரியா இருந்தாலும் சரி, பாய்சன்
இருந்தாலும் சரி, அது உடலுக்கு தேவையற்றது, தீங்கானது என்றால், பாகுபாடு பார்க்காமல்,
உடனடியாக வெளித் தள்ளுவது கல்லிரலின் பணியே. நீங்கள் எவ்வளவு மதுபானம் அருந்தினாலும்,
விடம் அருந்தினாலும் அவற்றை வெளியே கொட்டும் வேலையைச் செய்வது இவர்தான். நம் உடலுக்கு
வேண்டாத பொருள் அனைத்தையும் பிரித்து, கரைத்து இரத்தத்தின் வழியே சிறுநீரகத்துக்கு
அனுப்பி வெளியேற உதவுகிறது . கல்லீரல் மருந்து, மாத்திரை,
வைரஸ், பாக்டீரியா, விடம், போன்றவற்றைக் கரைக்கா விட்டால், சிறுநீரகம் அவற்றை வெளியேற்ற
முடியாது. உடலில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் யூரியாவையும் சேகரித்து அனுப்புகிறது.
அண்ணாச்சி, நமக்கெல்லாம் வறுத்தது, பொரித்தது, சிப்ஸ்,
உருளை வறுவல் என்று தான் பிடிக்கும். அனைத்து உணவுப் பொருளையும் நல்லா , நெறைய
எண்ணெய் ஊற்றி, சும்மா மொரு மொறுன்னு வறுத்து சாப்பிட்டாதான் நல்லா இருக்கும்னு
சொல்ற ரகம் நாம.! ஆனா நீங்க என்ன எண்ணெய் பொருள்
சாப்பிட்டாலும் சரி, இந்த பெரீய்ய தலீவன் கல்லீரல் இல்லாட்டி ஒண்ணும் ஆவாதுங்கோ..!
ஆமாம், எண்ணெய்ப் பொருள்களை சீரணம் செய்வது
இவர்தான். இதிலுள்ள பித்தப் பையின் சுரப்பி நீரான, பித்தநீர் தான், எண்ணெய் மற்றும் கொழுப்பை உடைத்து
சீரணம் செய்பவர்
கல்லீரல் புரதத்தை உடல் உட்கிரகிக்கும் எளிதான அமினோ
அமிலங்களாக மாற்றித் தருகிறது. கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A, D, E & K யின்
சேமிப்பு கிடங்கு இதுதான். அது மட்டுமில்ல நண்பா,, உங்களுக்கு ரொம்ப கொழுப்பு இருக்கிறதா?
கோபித்துக் கொள்ளாதீர்கள்..! கொலஸ்டிராலைத்தான் சொல்கிறேன். அதன் உற்பத்திக் கலனும்/களனும்
இங்கேதான். இரத்தம் உறைவதற்கான உதவி செய்பவரும் இவரே..! நாம் சாப்பிடும் வலிநிவாரணி
உட்பட, அனைத்து வகை மருந்துகளையும் பிரித்து பிரித்து ஆய்பவர் இவரே.!
கல்லீரலில் இரண்டு பெரிய இரத்தக் குழாய்கள் உள்ளன.
அதன் உதவியால்தான் இத்தனை பணிகளும் நடக்கின்றன. இந்த உறுப்பில் 96 % நீர்தான் உள்ளது.
இதன் மீள் திறனும், பணிப் பளுவும் அளப்பரியது. எனவே நல்ல உணவு உண்டு, நிறைய நீர் அருந்தி, நல்ல உடற்பயிற்சி செய்து கல்லீரலை காக்க
வேண்டியது மிக மிக அவசியம். உங்கள் கல்லீரல் நல்ல வேலை செய்யலைன்னா, தோலும், கண்ணும்,
நகமும் மஞ்சளாகிவிடும். மலம் வெள்ளையாக இருக்கும்.
இதனைக் கண்டறிவது எளிதே.! சில வைரஸ்
பாதிப்புகள், சில மருந்துகள், மதுபானம் போன்றவை கல்லீரலை சிர்ரோசிஸ்
(cirrhosis) வந்து செயலிழக்க செய்துவிடும். மாசு கலந்த காற்று , மன அழுத்தம்,
உடல் பருமனும் கூட கல்லீரலைப் பாதிக்கும்.
சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன், மஞ்சள் காமாலை போன்றவை, கொழுப்பு கல்லீரல்
உருவாக வழி வகுக்கும். பாதிக்கப் பட்ட கல்லீரலை,
கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம் சரி செய்யலாம். குடும்பத்தினர்/இரத்த உறவினர்தான், கல்லீரல் தரவேண்டும். கல்லீரலும் புற்று நோய் பாதிப்புக்கு ஆட்படும்
- 1997 ல் லண்டனில் 5 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இப்போதும் இவர் நன்றாக உள்ளார். இதுதான் உலகிலேயே, கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த குறைந்த வயது .
- அப்பல்லோ மருத்துவ மனையில் மட்டுமே, கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 க்கு மேற்பட்ட கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
- அமெரிக்காவில் சிரோசிசால் இறப்பவர்கள் வருடத்திற்கு, 25 ,௦௦௦000 .
- இந்தியாவில் சிர்ரோசிஸ் இறப்பு:2007 ல் 1 ,776 ;2008 ல் 1 ,965 ;2009l 2 ,048 . இது தெரிந்த கணக்கு. நம்ம கிராமத்தில் மருத்துவமனைக்கு வராமல் உயிர்விடுபவர்..?
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.
மிக உபயோகமான தகவல்கள் சார். மோகனாம்மாவுக்கும் நன்றி.:)
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள பகிர்வு.
பதிலளிநீக்குமிக்க நனறி, அவ்ர்களுக்கும் தங்களுக்கும்.
Informative post with so much details.
பதிலளிநீக்குConvey our birthday wishes to Professor Mohana.
மிக நன்றி பயனான கட்டுரைக்கு. பிந்திய பிறந்த நாள் வாழ்த்தும் உரித்தாகுக. தங்களிற்கும் நன்றி.வாருங்கள் என் வலைப்பக்கமும் இனிய நல் வரவு.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
கல்லீரல் பற்றி அருமையான தகவல்கள். அதற்கேற்ற படங்கள் அருமை. பிறந்த நாள் காணும் மோகனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ரத்னவேல் - கல்லீரல் பற்றிஅய் அரிய கருத்துகள் கொண்ட பேராசிரியர் மோகனாவின் கட்டுரை அருமை. அவர்களின் பிறந்த நாளன்று தவறாமல் வாழ்த்தி விட்டேன். அவர்களின் கட்டுரைகளைத் தவறாமல் பகிரும் தங்களின் செயலைப் பாராட்டுகிறேன். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்களை அன்போடு அழைக்கிறேன் வலைச்சரம் வருமாறு .
பதிலளிநீக்குநல்ல பகிர்வு .மிக்க நன்றி.
பதிலளிநீக்கு