வெள்ளி, மே 18, 2012

தோழர் திரு காஸ்யபனுடன் இனிய சந்திப்பு

நான் பதிவு எழுத ஆரம்பித்தது மார்ச், 2011.  எனது பதிவில் ‘என்னைப் பற்றிய குறிப்புகளில்”  எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, படிப்பதற்கு - ஆலோசனை, இதர வழிகளில்” என்று குறிப்பிட்டிருந்தேன்.


எனது பதிவை படிக்க ஆரம்பித்த திரு காஸ்யபன் (நாக்பூர்) அவர்கள் எனக்கு கடந்த வருடம் ஒரு நாள் தொலைபேசியில் பேசினார்.  எனது கொள்கைக்கு மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.  எங்களது தொலைபேசி தொடர்பு அவ்வப்போது இருந்து கொண்டிருந்தது. 



அவர் சொல்லியபடி அங்கு உள்ள ஒரு குழந்தைக்கு கல்விக்காக ஒரு சிறு உதவி செய்தேன்.  அதில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி – முகம் தெரியாத ஒரு சிறுமிக்கு உதவியிருக்கிறேன் என்று அடிக்கடி கூறுவார்.

இந்த வருடம் ஏப்ரல் மத்தியில் ஒரு நாள் தொலைபேசியில் பேசி மே மாத வாக்கில் தென்காசிக்கு ரயிலில் செல்வதாகவும் சந்திக்க முடியுமா என்று கேட்டார்.  நான் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன்.  பிறகு யோசித்தேன், இங்கு நிற்பது 2  நிமிடங்கள் – இதில் இவரை நேரில் பார்த்ததில்லை, ஒன்றும் பேச முடியாது, அதற்குள் ரயில் கிளம்பி விடும்.  எனவே நான் ஒரு மாற்று யோசனை சொன்னேன் – நீங்கள் எந்த கோச்சில் வருவீர்கள் என்று சொல்லுங்கள்.  நானும் எனது மனைவி திருமதி உமா காந்தி அவர்களும் அந்த கோச்சில் ஏறி கடையநல்லூர் வரை வருகிறோம், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் இருக்கும், நாங்கள் வரும் போது உங்களுக்கு காலை உணவு கொண்டு வந்து விடுகிறோம், நாங்கள் கடையநல்லூர் கோவிலில் சென்று சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சொன்னோம்.  அவர் நாங்கள் கிளம்பும் போது சொல்கிறேன் என்று சொன்னார்.  நாங்கள் கிட்டத்தட்ட 10 பேர் வரை வருவோம், அதனால் உணவு எல்லாம் கொண்டு வந்து நீங்கள் சிரமப்பட வேண்டாம் என்றும், உங்களைப் பார்த்து பேச வேண்டும் என்று சொன்னார்.

இந்த மாத ஆரம்பத்தில் திருச்சி மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் வரும் போது சொல்லி விட்டு வருகிறோம் என்றார்.  10.5.2012 அன்று பேசி நாளை வருகிறோம், நீங்கள் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு வந்து விடுங்கள், என்னுடன் வரும் மகள் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வரட்டும், நாம் வெளியில் பேசிக் கொண்டிருப்போம் என்றார்.  அவர்கள் கிளம்பி வரும் வழியில் பாதையை தவற விட்டதில் தாமதமாகி விட்டது.  எனவே அவர் வரும் போது எங்கள் வீட்டில் இறங்கிக் கொள்கிறேன், மற்றவர்கள் கோவிலுக்கு சென்று வந்து என்னை அழைத்துச் செல்வார்கள் என்றார்.  ஊரில் நுழைந்தவுடன் திரு காமராஜர் சிலை அருகில் நின்று போன் செய்தார்கள்.  எனது மனைவி சென்று அவர்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.  

திரு காஸ்யபன் அவர்களும், அவரது மனைவி திருமதி முத்து மீனாட்சி அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.  அவரது மகள், அவரது மருமகன், அவரது பேரன் எல்லோரும் கோவிலுக்கு சென்று வருகிறோம் என்று கூறிச் சென்றார்கள்.  நாங்கள் எப்படி செல்வது என்று அவர்களுக்கு சொல்லி அனுப்பினோம்.

அவருக்கு வயது 76க்கு மேல் இருக்கும்.  இவ்வளவு மூத்த வயதில் எங்களைப் பார்க்க வந்தது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  திருச்சியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்ல வேண்டியது, உங்களைப் பார்ப்பதற்காக தான் இங்கு வந்தோம் என்றார்.  நாங்கள் நெகிழ்ந்து விட்டோம்.  அவர்கள் வரும் போது கிட்டத்தட்ட இரவு 7 மணியாகி விட்டது.  எனவே இரவு உணவு அருந்தி விட்டு சொல்லுமாறு வேண்டினோம்.  அவர்களும் சரி என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட 8.15 அளவில் எனது மனைவி அவர்களுக்கு சப்பாத்தி தயார் செய்து சாப்பிட ஏற்பாடு செய்தார்கள்.  அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.  அவர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டது  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

திரு காஸ்யபன் அவர்களைப் பற்றி:

அவர் எனக்கு பதிவராக தான் தெரியும்.  அவரிடம் பேசிக் கொண்டிருந்ததில், அவரைப் பற்றிய குறிப்புகளில் படித்ததில் தெரிந்தது – எங்கள் வீட்டிற்கு வந்திருப்பது ஒரு மாமனிதரும் அவரது மனைவியும் என்று.  நாங்கள் மிகவும் நெகிழ்ந்து விட்டோம்.  அவர் ஒரு தொழிற் சங்கவாதி.  தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் கிட்டத்தட்ட 35 வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்.  தமிழில் மூன்று சிறு கதைத் தொகுப்புகளும், ஆங்கிலத்தில் ஒரு சிறு கதைத் தொகுப்பும், இந்தியில் ஒரு சிறு கதைத் தொகுப்பும், ஒரு நாவலும், ஒரு நாடகமும் எழுதியிருப்பதாக அவரது குறிப்புகள் காண்பிக்கின்றன.  அவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்திருப்பதாகவும், அதன் இணைப்பையும் குறிப்பிட்டார்.


திரு காஸ்யபன் அவரது மனைவி திருமதி முத்து மீனாட்சி அவர்களைப் பற்றி, அவர்கள் ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை பெற்றிருப்பதாகவும் – இவற்றில் மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், சமீபத்தில் சாஹித்ய அகாடமிக்கு ஒரு புத்தகம் மொழி பெயர்த்து கொடுத்திருப்பதாகவும், அந்த புத்தகம் அச்சில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.

எங்களுக்கு ஆச்சரியம், தாங்க முடியாத மகிழ்ச்சி.  எவ்வளவு பெரிய மாமனிதர்கள் எங்களைப் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரங்கள் எங்களது வீட்டில் இருந்தார்கள்.  அப்போது எனது தங்கை மகன் (அடுத்த வீடு தான்) வந்திருந்தான்.  அவன் B.Sc., இறுதியாண்டு படிக்கிறான் என்றும், அவனுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டோம்.  அவர் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம்.  அருமையான யோசனைகள் சொன்னார்கள்.

சுமார் 9 மணியளவில் அவரது குடும்பத்தினர் வந்து அழைத்துச் சென்றார்கள்.  இரவு நெடிய பயணம் இருப்பதால் அவர்கள் எங்கள் வீட்டிற்குள்  வர நேரமில்லை.  நாங்கள் இவர்களை அவரது கார் வரை சென்று வழியனுப்பி வந்தோம்.  அங்கு வைத்து எங்களை அவர் மகள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அவரது மகள் திருச்சியில் பணிபுரிவதாக சொன்னார்; அவர்களும் நிறைய படித்திருக்கிறார்கள்.  அவரது மருமகன் திருச்சி பொறியியல் கல்லூரியில் (முன்பு Regional Enbineering College – REC – தற்போது National Institute of Technology – NIT) பேராசிரியராகவும் ஒரு பிரிவுக்கு தலைவராக (Head of the Department – HOD) ஆக இருப்பதாகவும், அவரது மகன் நாக்பூரில் மத்திய அரசுப் பணி புரிவதாகவும், அவரது மருமகள் தபால் துறையில் பணி புரிவதாகரும் சொன்னார்.  அவரது குடும்பமே ஒரு பல்கலைக்கழகமாக விளங்குகிறது.  அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்தது எங்களுக்கு  பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறோம்.

அவரது பதிவின் இணைப்பு:


அவரது பதிவை நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்கள்.  அருமையாக எழுதியிருக்கிறார்கள். உங்கள் கருத்துக்களை அவரது பதிவில் பின்னூட்டமாக எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் அவரது ஜெயா தொலைக்காட்சிக்கான  நேர்காணலுக்கான 2 இணைப்புகள் கொடுத்திருக்கிறேன்.  நாங்களும் கேட்டோம்.  ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கருத்துகள் ‘தீர்க்கமாகவும், ஆழமாகவும், மனதைத் தைப்பதாகவும்’ இருக்கின்றன.



நீங்களும் நேரம் ஒதுக்கி ஆழ்ந்து கேட்கும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  பதிவுகளிலும், நேர்காணல்களிலும் உங்களது மனதில் பட்ட கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

















18 கருத்துகள்:

  1. வீடுதேடி வந்திருக்கிறார்.இவ்வளவு பெரிய எழுத்தாளர் உங்களைத் தேடி வந்துள்ளார் என்றால் உங்கள் பேச்சும் அன்புள்ளமும் மட்டுமே காரணம் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. Good experience sir......

    Avradhu panivai paakkum podhu uyarnthavarkal eppodhum thaaznthe iruppaarkal ena therikirathu...... Thank u sir

    பதிலளிநீக்கு
  3. தோழர் காஸ்யபனுடனான தங்கள் சந்திப்பு மனதை நெகிழ்த்தியது. இணையம் நமக்கு தந்த பெரும் கொடையிது. நல்ல பதிவு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. அன்பான சந்திப்புக்கு வாழ்த்துகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  5. அரிதான விஷயங்கள். அதை எங்களிடம் பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது அய்யா.

    பதிலளிநீக்கு
  6. //திருச்சியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்ல வேண்டியது, //
    அம்பை என் சொந்த ஊர்.

    பதிலளிநீக்கு
  7. சந்திப்பு மனசை நெகிழ வைத்தது. எங்கோ இருக்கும் முகம் தெரியா உறாவுகளை இணைக்கு இந்த வலைப்பூவிற்கு நாம் நன்றி சொல்லனும் ஐயா

    பதிலளிநீக்கு
  8. நெகிழ்வான சந்திப்பை நேரில் பார்த்தது போல இருக்கு சார் இந்த பதிவு :)

    பதிலளிநீக்கு
  9. காஷ்யபன் அய்யா அவர்கள். தங்களை சந்திக்க வரும் முன்னர் எனக்கும் போன் செய்தார். மாபெரும் மனிதர். ஆனால் எளிமையானவர்.
    நான் வசிப்பது ஓரிடத்திலும், பணிபுரிவது வேறிடத்திலுமாக இருப்பதால் அவரை சந்திக்கும் வாய்ப்பை பல முறை தவற விட்டிருக்கிறேன்.
    இரு பெரிய மனிதர்களின் சந்திப்பு. வணங்குகிறேன் இருவரையும்

    பதிலளிநீக்கு
  10. காஸ்யபன் அவர்கள் மிகவும் பண்பட்ட உயர்ந்த மனிதர். அவரைச் சந்தித்து அதைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நீங்களும் சிரமம் பாராமல் இரவு நேரத்தில் அவர்களுக்கு சமைத்து உணவு வழங்கியது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் தென்காசி அருகிலா இருக்கிறது? சென்னையருகில் இருப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்!

    பதிலளிநீக்கு
  11. மா மனிதர்கள் எவ்வளவு எளிமையாக உள்ளார்கள்!

    பதிவு நெகிழ வைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் ரத்னவேல், நல்ல மனிதர் - வயதில் மூத்தவர் - தங்களைத் தேடி வீடு வந்து சில மணி நேரம் ஒதுக்கி - அளவளாவி - மகிழ்ந்து - சென்றது அவரது நல்ல குணத்தினைக் காட்டுகிறது. தங்களின் விருந்தோம்பலும் புகை வண்டியில் ஒரு மணி நேரம் பயணம் செய்து - சந்திப்போம் எனக் கூறியது - பாராட்டத் தக்கது. தங்கஈனி பதிவர்களைச் சந்திக்கும் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. நான் தான் உங்கள் ஊருக்கு வந்தும் தங்களைச் சந்திக்க இயலவில்லை. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  13. மிக அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  14. கொள்கை சொல்வது எளிது
    கைகொள்வது கடினம்
    உங்களுக்கு இயல்பாகச் சாத்தியமானது;
    நீங்கள் இருவரும் கொடுத்துவைத்தவர்கள்!

    பதிலளிநீக்கு
  15. நல்ல நட்புக்கு உதாரணமாய் உங்கள் சந்திப்பு! பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாபுதன், மே 23, 2012

    மிக அருமையான பதிவு, சந்திப்பு, மாமனிதர் பற்றி அறிந்தது மகிழ்வு. ஏன் எனக்கு மிக நீண்ட நாள் எடுத்துள்ளது இரத்தினவேல் ஐயாவின் இணைப்பைப் படிக்க என்று தெரியவில்லை. ஆயினும் இன்றாவது வாசித்தேன் என்று மகிழ்கிறேன். தாங்களும் சகோதரர் காசியப்பனும் ஆரோக்கியமாக பல சேவைகள் செய்து வாழ இறையருள் கிட்டட்டும். மிக நன்றி இவைகளை அறியத் தந்ததற்கு. (தாங்கள் கேட்டபடி இந்தக் கருத்தைச் சகோதரரின் வலைக்கும் சேர்க்கிறேன்.)
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  18. மதிப்பிற்குறிய ரத்னவெல் அவர்களே! உங்கள் பதிவை முதல் நாளே படித்து விட்டேன் நன்பர்கள் பின்னூட்டத்திற்காக காத்திருந்தேன்.பதிவர் "விச்சு" அவர்கள் குறிப்பிட்டுள்ளது தான் சரி. இந்தியாவின் வடக்குதெற்காகவும் கிழக்கு மேற்காகவும் கோடுபொட்டல் அது சந்திக்கும் இடம் நாகபுரி. அதனை"0"மைல் என்று . குறிப்பிட்டு அந்த புள்ளியில் ஒரு நினைவு கம்பம் நட்டுவைத்துள்ளார்கள். 1000 கி.மீ பயணம் செய்து உங்களைப் பார்த்தெனென்றால் அதற்கு முக்கிய காரணம் உங்கள்பெச்சும் அன்புள்ளமும் தான்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு